நீரே மேலானவர்

 

நீரே மேலானவர்

நான் உம்மை நேசிக்கிறேன் 

 

                எந்தன் பொக்கிஷமே

                எந்தன் மாணிக்கமே

                விலையேறப்பெற்றவர் நீரே

 

உந்தனின் பொக்கிஷம் எங்கேயோ

அங்கே உன் இருதயம் இருக்குமென்றீர்

இயேசுவே நீரே எந்தன்pன் எல்லாம்

ஆசையும் வாஞ்சையுமானவரே - நீரே

 

பூமிக்கு உரிய..வைகள் அல்ல

மேலானதையே நாடுங்கள் என்றீர்

இயேசுவே நீரே உச்சிதம் ஆனவர்

உந்தனையே நெஞ்சம் நாடிடுதே  - நீரே

 

உலக பொக்கிஷம் அழிந்திடுமே

பூச்சியும் துருவும் கெடுக்குமென்றீர்

இயேசுவே நீரே அழியாத பொக்கிஷம்;

ஆஸ்தியும் ஐசுவரியமானவரே  - நீரே